தமிழ்நாடு

அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ரத்தாகுமா? -ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு நாளை பேச்சுவார்த்தை

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை தமிழக அரசு நாளை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது.

தந்தி டிவி

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

இந்த நிலையில் , ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை நாளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மூத்த அமைச்சர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளிடையே நாளை தலைமைச் செயலகத்தில் நடக்கும் பேச்சுவார்த்தையின் முடிவில், வேலை நிறுத்த அறிவிப்பு ரத்தாகுமா, அல்லது திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறுமா என்பது குறித்து தெரிய வரும்.

இந்த நிலையில் முக்கிய கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்