தமிழ்நாடு

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு துவங்கியது : மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம்

தமிழகத்தில்,முதல் முறையாக ஆன்லைன் மூலமான பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று துவங்கியது.

தந்தி டிவி
நடப்பாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர,ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதில்,190 முதல் 200 வரை கட்-ஆப் மதிப்பெண் இருக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வு,நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது.நள்ளிரவே 58 மாணவர்கள்,தாங்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்து பதிவு செய்துள்ளனர்.மாணவர்கள்,அண்ணா பல்கலைக்கழக இணையத்தளத்திற்குள் சென்று,தாங்கள் விரும்பும் கல்லூரிகளின் பட்டியலை 27ஆம் தேதி மாலை 5 மணி வரை வரிசைபடுத்தலாம்.தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை 29ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். கம்ப்யூட்டர் வசதியில்லாத கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில்,மாநிலம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில்,42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்