தமிழகத்தில் மின் உற்பத்தி பணிகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி காணொலி காட்சி மூலம் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டடார். கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மின்தேவை அதிகரிப்பு குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வை முன்னிட்டு நாளை முதல் சிறுகுறு தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதித்ததை தொடர்ந்து தடையின்றி மின் விநியோகம் செய்ய அமைச்சர் தங்கமணி உரிய ஆலோசனைகளை வழங்கினார். அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்புடன் செயல்பட்டு மின்தடங்கலை நீக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். இதனிடையே தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 22-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.