தமிழ்நாடு

``வரும் 5,6ம் தேதிகள்''... தேதி குறித்த திமுக... தொண்டர்களுக்கு பறந்த உத்தரவு

தந்தி டிவி

மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில், வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும், 6-ம் தேதி உண்ணாவிரத போராட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 29-ம் தேதி காணொலி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில், 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நீதி பரிபாலனத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானதாகவும், நாட்டை காவல்துறை ஆதிக்க ஆட்சி நாடாக மாற்றப்படும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், வரும் 5-ம் தேதி காலை மாவட்ட நீதிமன்றங்கள் மூன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, வரும் 6-ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, 3 குற்றவியல் சட்டங்கள் பொதுமக்கள் அறியும் வகையில் தமிழகம் முழுவதும் கண்டன கருத்தரங்கங்கள் நடத்துவது ஆகிய 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Erode | Boy | Flood | காட்டாற்று வெள்ளத்தை வேடிக்க பார்க்க சென்றசிறுவனுக்கு நடந்த விபரீதம்

Thoothukudi | Girl | Student| மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு

Madurai Crime | நள்ளிரவை நடுநடுங்க வைத்த படுகொ*ல - ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுவன்.. பகீர் சம்பவம்

🔴LIVE: Madurai | crime | மதுரை மீனாட்சி கோயில் அருகே சிறுவன் வெட்டி படுகொலை

Kodaikanal | CM Vijay | Tourist | "கொடைக்கானல் போக போறீங்களா?"முதல்வர் விஜய் சொன்ன குட் நியூஸ்