தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 5,791 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 ஆயிரத்து 791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 ஆயிரத்து 791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையும், 9 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 706 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 341 ஆக உள்ளது.

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் ஆயிரத்து 280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 63 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 19 பேரும், இதுவரை 3 ஆயிரத்து 166 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 511 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்