தமிழ்நாடு

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார் தமிழக முதலமைச்சர்

சென்னையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

தந்தி டிவி

* சென்னையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

* சென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

* தமிழகத்தில் உள்ள நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழ் நாடு நீர்வள் ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைத்தல் கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.

* விவசாயிகள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியில் காய்கறிகளை பயிர் செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில் முதலமைச்சரின் வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம் கிராமப்புறங்களில் தொடங்கப்படும்.

* ஏழை எளிய மக்களுக்காக பள்ளிக்கரணையில் 100 படுக்கைகள் கொண்ட புறநகர் மருத்துவமனை 31 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்

* கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு 12 அறுவை அரங்கங்கள், 260 படுக்கை வசதிகொண்ட அடித்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டடம், 141 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்

* மேலும், செயற்கை சுவாச கருவிகள் அல்ட்ரா ஸ்கேன் கருவிகள் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் 134 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்

* சென்னையின் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 45 கிலோ மீட்டர் நீளம் முக்கிய சாலைகளை அகலப்படுத்தி, மேம்பாடு செய்யும் பணிகள் 344 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்

* சென்னை அடையாறில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சர்தார் பட்டேல் சாலையில் மத்திய கைலாஷ் பகுதியில் சாலை மேம்பாலம் கட்ட 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

* எம்ஜிஆரின் இல்லமான ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள 20 கிலோ மீட்டர் நீள மவுண்ட் பூந்தமல்லி ஆவடி நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்