தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் சேவை - செயல்பாடு எப்படி?

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்த சில தகவல்களை

தந்தி டிவி

* தமிழகத்தில் 2017ஆம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை 12 லட்சத்து 39 ஆயிரத்து 254 பேர் பயன்படுத்தி உள்ளனர்.

* அதேநேரம் சாலை விபத்துகளில் சிக்கி, ஆம்புலன்ஸ் சேவைகளை பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 339 ஆக உள்ளது.

*108 ஆம்புலன்ஸ் சேவைகளால் 73 ஆயிரத்து121 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.

* சாலை விபத்துகளில் சிக்கி, ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 608 ஆக உள்ளது.

* சாலை விபத்து நடந்த உடன், சம்பவ இடத்தை அடைய ஒரு ஆம்புலன்ஸ் எடுக்கும் சராசரி நேரமானது 2016ஆம் ஆண்டில் 18 நிமிடங்களாக இருந்தது. ஆனால் அது 2017 ஆம் ஆண்டில் 15 நிமிடங்களாக குறைந்துள்ளது.

* தமிழகத்தில் 2016ஆம் ஆண்டில், மாதம் ஒன்றுக்கு சராசரியாக 17 ஆயிரத்து 994 சாலை விபத்து சம்பவங்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 2017 ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 611 ஆக ஆம்புலன்ஸ் சேவை உயர்ந்தது...

* சாலை விபத்தில் சிக்கி, மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படும் போது, வழியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2016ல் 140 ஆக இருந்தது. ஆனால் அது 2017 ல் 115 ஆக குறைந்தது.

* தமிழகத்தில் மொத்தம் 926 ஆம்புலன்ஸ் வண்டிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்