தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் வெடித்த வழக்கறிஞர்கள் போராட்டம்.. பரபரப்பு

தந்தி டிவி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் முன்பாக வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில், இருநூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு, இருநூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராகவும் 3 சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

கும்பகோணத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மற்றும் திமுகவின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக, வழக்கறிஞர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் ஆனது நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். 

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு