அடல் பிகாரி வாஜ்பாய் மறைவையொட்டி, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உருவப்படத்திற்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தை கொண்டு வந்தவர் வாஜ்பாய் என்றும், பன்முக திறமை கொண்ட தலைவரை இழந்தது இமயமலை சரிந்து போல உணருவதாகவும் குறிப்பிட்டார்.