தமிழ்நாடு

தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுக - நீதிமன்றத்தில் சோபியா தந்தை மனுத் தாக்கல்

பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சோபியாவின் தந்தை சாமி, தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி

விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாக தமிழிசை அளித்த புகாரின் பேரில் மாணவி சோபியா கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுதலை ஆனார். தமது மகளை பா.ஜ.க. வினர் மிரட்டியதாக தமிழிசை மீது போலீசாரிடம் தந்தை சாமி புகார் அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தமிழிசை மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக் கோரி சோபியாவின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் 10ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்