தமிழ்நாடு

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தந்தி டிவி

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தாக்கல் செய்த மனுவில், முறையற்ற வகையில் கனிமொழி வேட்பு மனு தாக்கல் செய்ததாக கூறியுள்ளார். வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது ஆட்சேபனை தெரிவித்த போதும், தேர்தல் அதிகாரி அதனை நிராகரித்து விட்டதாக தமிழிசை தனது மனுவில் குற்றம் சாட்டி உள்ளார். கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் பிரஜைகள் என கூறியுள்ள கனிமொழி அதற்குரிய குடிமக்கள் பதிவுச் சான்றிதழை இணைக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்கியதாகவும் மனுவில் தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு