தமிழ்நாடு

தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் - தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி 5 கோடியே 86 லட்சம் வாக்காளர்கள் இருந்ததாகவும், ஆனால் இறப்பு, இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்ட பிறகு 2019 ஆம் ஆண்டு வரைவு வாக்காளர் பட்டியலின் படி தற்போது 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாகவும், கடந்த ஜனவரி 11ஆம் தேதி முதல் இன்று வரை ஒரு லட்சத்து 82 ஆயிரம் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளதாகவும், இங்கு 6 லட்சத்து 7 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல், சேர்த்தல், திருத்தல் உள்ளிட்டவற்றை செய்ய செப்டம்பர் 9, செப்டம்பர் 23, அக்டோபர் 7 மற்றும் அக்டோபர் 14 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், 1.1.2019 அன்று 18 வயது நிறைவடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்