ஜிஎஸ்டி வரியை எதிர்கெள்ளும் வகையில் அரசு பள்ளிகளில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு கணக்கு தணிக்கை பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆரணியில் பள்ளி கட்டட திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், புதிய பாடத்திட்டத்தை நடத்தும் வகையில் 10 நாட்களில் ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.