LIVE Pattukkottai Machine Death 
தமிழ்நாடு

தென்கொரியாவில் ரோபோ மோதி தமிழக இளைஞர் உயிரிழப்பு – திருமணம் நிச்சயமான நிலையில் சோகம்

தென்கொரியாவில் ரோபோ மோதி தமிழக இளைஞர் உயிரிழப்பு – திருமணம் நிச்சயமான நிலையில் சோகம்

thanthitv

தென்கொரியாவில் பணியின்போது ரோபோ மோதி பட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்...

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கண்ணுகுடி வடக்கு தெருவைச் சேர்ந்த 32 வயதான சுதர்சன், தென்கொரியாவின் சியோரா நகரில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். தொழிற்சாலையில் இருந்த ரோபோ எதிர்பாராத விதமாக சுதர்சனின் மார்பு பகுதியில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடந்த வாரம்தான் சுதர்சனுக்கு அவரது பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்திருந்த நிலையில், இந்த சோக சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுதர்சனின் உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்களும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || CM விஜய் வரும் தேதி அறிவிப்பு - 54 ஏக்கரில் பிரமாண்ட ஏற்பாடு... ரெடியாகும் தவெக

Anbil Mahesh Case | அன்பில் மகேஷ் நண்பரிடம் விசாரணை.. 7 மணிநேரம் நடந்தது என்ன?

Antibiotics | Tablets | "ஆன்டிபயாட்டிக், வலி நிவாரண மாத்திரைகள்.. சட்டப்படி குற்றம்.."

BREAKING || பரபரப்பை கிளப்பிய மதுரை மாநகராட்சி முறைகேடு... கோர்ட் போட்ட உத்தரவு

Mission Olympic 2036 | சிறப்பு அதிகாரியாக இறங்கிய மயில்வாகனன் IPS - ஏன் தெரியுமா?