தமிழ்நாடு

சாலை விபத்துகளில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்...

சாலை விபத்துகளில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

* சாலை விபத்துகளில் இறந்த பாதசாரிகள் பற்றிய புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில், இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 12 ஆயிரத்து 330 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், கடந்த ஆண்டு மட்டும் தினமும் 56 பாதசாரிகள், சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

* கடந்த 2017ம் ஆண்டு, இந்தியாவிலேயே அதிகபட்சமாக, தமிழகத்தில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 3 ஆயிரத்து 507 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்து, மகாராஷ்டிராவில் ஆயிரத்து 831 பேரும், ஆந்திராவில் ஆயிரத்து 379 பேரும் உயிரிழந்துள்ளனர்.

* இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 6 ஆயிரத்து 329 இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர்.

* உத்தரபிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 699 ஆகவும், மகாராஷ்டிராவில் 4 ஆயிரத்து 659 ஆகவும் உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்