தமிழ்நாடு

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரி 15 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மதுபானங்கள் விலை 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை ஏற்றப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சாதாரண வகை 180 மில்லி அளவு கொண்ட மதுபான பாட்டிலின் சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாக விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை மதுபாட்டில் சில்லறை விலையில் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர பிற பகுதிகளில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்