பதற்றம் மற்றும் பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில், ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்துதல், கூடுதல் காவலர்களை நியமித்தல், மூன்றடுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துதல், மொபைல் டீம் அமைத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. வாக்குப்பதிவின் போது 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள நிலையில், பதற்றமான பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் அல்லாதவர்கள், தேர்தல் பகுதிகளில் இருந்து வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.