தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடுதிகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதித்துள்ள அரசு, மேலும் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது