தமிழ்நாடு

காவல்துறை பயன்பாட்டிற்கு 2,771 புதிய வாகனங்கள் - கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

தமிழக காவல்துறை பயன்பாட்டிற்கு வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றங்களை தடுக்கவும், ரோந்து பணிகளுக்காக காவல்துறைக்கு புதிய வாகனங்கள் வாங்கப்படும் என காவல்துறை மானியக்கோரிக்கையின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதனை செயல்படுத்தும் விதமாக 95 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில், இரண்டாயிரத்து 771 வாகனங்களை காவல்துறை பயன்பாட்டிற்காக முதலமைச்சர் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், காவல்துறையின் புதிய வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்