திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள காசம்பட்டியில் FQL செயலி மூலம் பல கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது... இந்நிலையில், அதில் தனது பணத்தை இழந்த 25 வயதே ஆன மாயழகன் என்ற இளைஞர் மாந்தோப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய உறவினர்களும் பொதுமக்களும், மாயழகனின் உடலைக் கைப்பற்ற வந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.