தமிழ்நாடு

சதம் அடித்தது பெரிய வெங்காயம் : அரை சதத்தை தாண்டியது சின்ன வெங்காயம்

மழையால் வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ வெங்காயம் விலை 150 ரூபாயை தொடும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னை, கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 110 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.வெங்காயத்தை சிலர் பதுக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள வியாபாரிகள், அதனை வெளி கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், அவை சந்தைகளுக்கு வந்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் வரும் நாட்களில் வெங்காயம் விலை 150 ரூபாயை எட்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்