தமிழ்நாடு

வலுக்கும் 7.5% உள் ஒதுக்கீடு கோரிக்கை - ஆளுநர் ஒப்புதல் கிடைக்குமா?

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கும் நிலையில், 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் 7.5% இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் தர தயார் என மத்திய அரசு வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது

தந்தி டிவி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதி தராமல் அமைதி காக்கிறார்.

* இந்த விவகாரத்தில் ஆளுநரின் அனுமதியைப் பெற்றே தீர வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முனைப்பு காட்டி வருகிறார்

* கடந்த திங்களன்று ஜெயக்குமார், செங்கோட்டையன் , சிவி சண்முகம் , கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் ஆகிய 5 அமைச்சர்கள் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரை சந்தித்து பேசினர்.

* ஆனால் இந்த விவகாரத்தில் மற்றொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கென மத்திய அரசு கொண்டுவந்துள்ள 10% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தினால் 7.5% இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் தர தயார் என மத்திய அரசு வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இதனால் 10% இட ஒதுக்கீடு விவகாரத்தால் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தள்ளி போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

* 10% இட ஒதுக்கீட்டை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது எனவும் தமிழகம் சமூக நீதி மாநிலம் எனவும் தமிழக அரசு தரப்பில் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

* 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் தர தாமதமாகும் சூழலில் இதற்காக அ.தி.மு.க.வுடன் சேர்ந்து போராட தி.மு.க. தயார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக மருத்துவக் கலந்தாய்வை தமிழக அரசு தள்ளிவைத்திருப்பதால் எப்போது ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் உள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி