Tamilnadu | Kerala | TN Govt | Sabarimala | Pongal Gift | சபரிமலையில் ரூ.300க்கு விற்கப்படும் தமிழக அரசின் இலவச வேட்டி இருமுடி பை
#tamilnadu #kerala #tngovt #sabarimala #pongalgift #thanthitv
சபரிமலையில் தமிழக அரசின் இலவச வேட்டி இருமுடி பை ரூ.300-க்கு விற்பனை சபரிமலை பம்பையில், தமிழக அரசு இலவசமாக வழங்கிய வேட்டியால் தயாரிக்கப்பட்ட இருமுடிப் பை 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. சபரிமலை சென்றிருந்த பண்ருட்டியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் நவநீதகிருஷ்ணன், பையில் தமிழக அரசின் முத்திரை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். இலவச வேட்டிகள் விற்பனைக்கு வந்தது எப்படி எனக் கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.