தமிழ்நாடு

'டாஸ்மாக்' மூடல் - உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தந்தி டிவி

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை தவிர்த்து மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் கடந்த 7 ஆம் தேதி திறக்கப்பட்டன. இதையடுத்து மதுபானங்களை வாங்க சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. இது தொடர்பான பொது நல வழக்கில், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்ட விதிகளை கடைபிடித்த நிலையில், ஒரு சில இடங்களில் விதிமீறல்கள் காரணமாக ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கின்போது மதுவிற்பனை நடக்கும் போது தமிழகத்தில் விற்கக் கூடாது என்று சொல்வது தவறானது என்றும் தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்