தமிழ்நாடு

தமிழக மீனவர் படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தந்தி டிவி
ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதில், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மெக்கான்ஷ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள், இரவு 11 மணியளவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த இலங்கை கடற்படையினர் எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் படகின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் படகில் இருந்த கண்ணாடி சிதறியதில், ஜேசு என்ற மீனவரின் கண் பாதிக்கப்பட்டதாக சக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள், பாதிக்கப்பட்ட அந்த மீனவரை மதுரைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த தகவலை, படகை இயக்கிய மீனவர் டல்வின் ராஜ் தெரிவித்துள்ளார். தற்போது இரட்டை மடி வலை பயன்பாடு அதிகரித்துள்ளதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என மீன​வர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு