தமிழ்நாடு

கொரோனா பணியில் ஈடுபட்ட காவலர்கள், மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு செல்ல வேண்டும் - தமிழக டிஜிபி உத்தரவு

காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு கொரோனா கட்டுப்படுத்தும் பணிக்கு தமிழகம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களை, அவர்கள் வேலை பார்க்கும் சிறப்பு பிரிவில் மீண்டும் பணியை தொடர தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்

தந்தி டிவி

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு, போக்குவரத்து, சிபிசிஐடி, மத்திய குற்றப்பிரிவு, மது விலக்கு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் காவலர்கள் கொரோனா கட்டுப்படுத்தும் பணி, விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டார்கள். தற்போது தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் ,கொரோனா கட்டுப்படுத்தும் பணியில் செயல்படும் சிறப்பு பிரிவு காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீண்டும் அவர்களது சிறப்பு பிரிவு பணிக்கு செல்லுமாறு தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார். அவர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள சிறப்பு பிரிவு தலைமை இடத்தில் உடனடியாக தகவல் தெரிவித்து பணியில் சேர வேண்டும் என தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்