தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,982 பேருக்கு கொரோனா - புதிதாக 18 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில், ஒரே நாளில்1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில், ஒரே நாளில்1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. புதிதாக 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 367 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,342 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்து 47 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும், 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் 1,479 பேருக்கு புதிதாக தொற்று - சென்னையில் மொத்த பாதிப்பு 28,924

சென்னையில் ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 924 ஆக உயர்ந்துள்ளது. 14 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர். 13 ஆயிரத்து 906 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ளனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு