தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,587 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 27 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 73 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 594 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 16 ஆயிரத்து 180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையை அடுத்து சென்னையில் 179 பேருக்கும், ஈரோட்டில் 117 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 115 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரில் 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்