தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,596 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 28 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 534 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 16 ஆயிரத்து 221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையை அடுத்து சென்னையில் 186 பேருக்கும், ஈரோட்டில் 130 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 108 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரில் 92 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்