தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக விவரங்கள்

தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு இருப்பது இம்மாதம் 7ம் தேதி கண்டறியப்பட்டது

தந்தி டிவி

தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு இருப்பது இம்மாதம் 7ம் தேதி கண்டறியப்பட்டது. ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரம் திரும்பியவருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்

* 2வது நபராக டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய வாலிபருக்கு பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரியவந்தது.

* கொரோனா தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது நபர் , அயர்லாந்து நாட்டின் டப்லின் நகரில் இருந்து சென்னை வந்த 21 வயது வாலிபர் ஆவார்...

* அதிகபட்சமாக மாநிலத்தின் தலைநகரான சென்னையில் 19 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணாநகர் மண்டலத்தை சேர்ந்த 5 பேர் , கோடம்பாக்கத்தை சேர்ந்த 5 பேர் , வளசரவாக்கம் மண்டலத்தை சேர்ந்த 2 பேர் , ஆலந்தூர், கோட்டூபுரம் , தேனாம்பேட்டை மண்டலங்களை சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* ஈரோட்டில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சுகாதார துறை தெரிவித்து உள்ளது. 4 பேரும் அண்மையில் டெல்லியில் இருந்து ஈரோடு திரும்பியுள்ளனர். அனைவரும் பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

* சேலத்தில் மொத்தம் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதில் 4 பேர் இந்தோனேஷியாவில் இருந்து சேலம் திரும்பியவர்கள்.. ஒருவர் சென்னையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி.. அனைவரும் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* அரியலூர் மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் பணிபுரிந்த அரியலூரை சேர்ந்த 25வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

* தாய்லாந்திலிருந்து மதுரை வந்திருந்த இருவர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்ட 54 வயது முதியவர் , உயிரிழந்தார்.

* கோவையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. புதிதாக கொரோனா தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்ட 4 பேர் , தாய்லாந்தில் இருந்து திரும்பிய நபருடன் தொடர்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது..

* நெல்லை , தஞ்சை ,திருச்சி , ராணிப்பேட்டை , விருதுநகர் பகுதிகளில் தலா ஒருவரென ஐந்து பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி