தமிழ்நாடு

தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவி : ஆக.13ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்...

தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு தகுதியானவர்கள் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு தகுதியானவர்கள் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக தலைமை தகவல் ஆணையராக இருந்த ஷீலா பிரியா ஓய்வு பெற்றதையடுத்து புதிய ஆணையர் தேர்வு செய்யப்படவுள்ளார். 5 ஆண்டு பதவிக்காலம் கொண்ட இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவோ, அரசியல் கட்சியில் உள்ளவராகவோ, ஆதாயம் தரும் பதவிகளில் உள்ளவராகவோ இருக்கக்கூடாது என்று தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் வாழ்க்கை முறையை நன்கு அறிந்தவர்கள், சட்டத்தில் முன் அனுபவம் கொண்டவர்கள், அறிவியல், தொழில்நுட்பம், நிர்வாகம், உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்குபவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்