தமிழ்நாடு

"தமிழுக்காக, திமுக எம்.பி.க்கள் குரல் கொடுக்கிறார்கள்" - ஸ்டாலின்

தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் தி.மு.க. எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்பி வருவதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் தி.மு.க. எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்பி வருவதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், பெரியார் தமிழரா, அவர் தமிழுக்கு என்ன செய்தார் என்று கேள்வி எழுப்புவோர் இவர்தாம் பெரியார் என்ற நன்னனின் புத்தகத்தை படிக்க வேண்டும் என்றார். தபால்துறை தேர்வு, ரயில்வே துறை சுற்றறிக்கை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவது உள்ளிட்ட விவகாரங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.

"திராவிடம் என்ற வேட்டியை தமிழர்கள் மறக்க மாட்டார்கள்" - கி. வீரமணி

தமிழர்கள் திராவிடம் என்ற வேட்டியை மறக்க மாட்டார்கள் என, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியுள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஆட்சியில் இருப்பவர்கள் ஒன்றும் செய்வதில்லை என்றும், எதிர்கட்சியாக இருப்பவர்கள் தான் நல்லது செய்கிறார்கள் என்றும் கூறினார். ஹிந்தியை சுலபமாக திணிக்க நினைக்கிறார்கள் என்ற வீரமணி, இருபத்து நான்காயிரத்து 500 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவதாக மத்திய அரசின் புள்ளி விவரமே ஒப்புகொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்