தமிழ்நாடு

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் உறுப்பினர் நாகசாமியை பதவி நீக்கம் செய்க - திமுக தலைவர் ஸ்டாலின்

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் குடியரசுத் தலைவர் விருதுகள் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நாகசாமியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது என திருவள்ளுவரை சிறுமைப்படுத்தி, கூறிய நாகசாமியை,செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுகளைத் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமித்திருப்பதற்கு திமுக கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஐந்தாண்டு காலத்தில் படிப்படியாக நிதி குறைக்கப்பட்டு தமிழ்மொழி பற்றி எந்த ஆய்வுகளுமே மேற்கொள்ள முடியாமல் அந்த நிறுவனம் தத்தளித்து நிற்பதாகவும்,2016-17 முதல் செம்மொழி தமிழாய்வு நிறுவன விருதுகளையும் அறிவிக்காமல் தமிழ் அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்குவதையோ, விருதுகள் வழங்கி கவுரவிப்பதையோ, பா.ஜ.க. அரசு வஞ்சக எண்ணத்துடன் தடுத்து நிறுத்தியிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் "குடியரசுத் தலைவர் விருதுகள் தேர்வு செய்யும் கமிட்டியில்" உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நாகசாமியை உடனடியாக பதவி நீக்கம் செய்து விட்டு,ஆழமான தமிழ்ப் பின்னணியும் ஆராய்ச்சிப் புலமையும் மிக்க நல்ல தமிழறிஞர்களை அந்த குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரை கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு