தமிழ்நாடு

தாம்பரம் அருகே 6 வயது சிறுமியை கொன்ற சித்தி - சிறுமியின் மாற்றாந்தாய் ஒப்புதல் வாக்குமூலம்

தாம்பரம் அருகே கணவரது முதல் மனைவியின் குழந்தையை கொன்ற சித்தி கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

இந்த வீடியோவில் உள்ள 6 வயது குழந்தை, தற்போது உயிருடன் இல்லை. வீட்டின் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட இந்த குழந்தை, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் அதிர வைத்துள்ளது.

சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தை சேர்ந்த பார்த்திபனின் மகள் இந்த ராகவி. தனியார் பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பு படித்து வந்த இந்த சிறுமி, வீட்டின் 2வது மாடியில் இருந்து தவறி, கீழே விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

ஆனால், போலீசார் விசாரணையில் இந்த சிறுமி கொலை செய்யப்பட்ட உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முதல் மனைவி இறந்த நிலையில், சூரியகலாவை 2-வதாக திருமணம் செய்துள்ளார் பார்த்திபன். குழந்தை இறந்தது குறித்து சூர்யகலாவிடம், போலீசார் விசாரணையை நடத்தி உள்ளனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார், அவரை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சூர்யகலாவுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில்,

2-வது முறையாக அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். ஏற்கனவே ராகவி என்ற மகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளதால், அந்த கருவை கலைக்குமாறு பார்த்திபன் வலியுறுத்தி உள்ளார்.

ஆனால், ராகவியை கொன்று விட்டால், கர்ப்பத்தை கலைக்க வேண்டிய அவசியம் இருக்காது என திட்டமிட்ட சூர்யகலா, செவ்வாய்கிழமை, 2-வது மாடியில் இருந்து குழந்தை ராகவியை தூக்கி வீசி கொன்றுள்ளார்.

குழந்தையை மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றுவிட்டு, தவறி விழுந்து இறந்துவிட்டதாக சூர்யகலா நாடகமாடியது, போலீசார் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எதிர்பாராத விபத்து என அனைவரும் வருந்திய நிலையில், சிறுமியை திட்டமிட்டு, சித்தியே கொன்ற சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்