தமிழ்நாடு

"இந்து பையனோட நீ போவியா; புர்காவை கழட்டு..?"-இஸ்லாமிய பெண் மீது தாக்குதல்..

தந்தி டிவி

பெங்களூருவில் வேற்று மதத்தை சேர்ந்த ஆணுடன் நடந்து சென்ற இஸ்லாமிய பெண்ணிடம், தகராறில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் இஸ்லாமிய பெண் ஒருவர், இந்து சமூகத்தைச் சேர்ந்த தனது நண்பருடன் நடந்து சென்றுள்ளார். அப்போது ஜாகீர் என்ற நபர் அவர்களை தடுத்து நிறுத்தி, இந்து மதத்தை சேர்ந்த ஆணுடன் ஏன் சுற்றி திரிகிறீர்கள் என கேட்டு, தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணை பிடித்து தள்ளியதுடன், புர்காவை கழட்டுமாறும் ஜாகீர் வற்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இஸ்லாமிய பெண் அளித்த புகாரின் பேரில், ஜாகீர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்