தமிழ்நாடு

Thiruparankundram Issue | தி.குன்றம் வழக்கு - நீதிபதி GR சுவாமிநாதன் புதிய உத்தரவு

திருப்பரங்குன்றம் வழக்கு: நீதிபதி உத்தரவின் பேரில் பூஜை அனுமதி குறித்து தீர்ப்பு

thanthitv

#thiruparangundramcase #thiruparankundramissue திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு மார்ச் 18க்கு ஒத்திவைப்பு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் 5 நபர்களை பூஜை செய்ய அனுமதிப்பு குறித்த முடிவை தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு எடுத்துக்கொள்ளப்பட்டது. மதுரை மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர், கோவில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினர் நேரில் ஆஜராகினர். தீர்ப்பை அமல்படுத்த இலாகாவின் ஒப்புதல் தேவைப்படுவதால் இரண்டு வார அவகாசம் வழங்குமாறு அறங்காவலர் குழு தரப்பில் கோரப்பட்டது. இதற்கு நீதிபதி, உத்தரவை செயல்படுத்தாததற்கான காரணம் அறங்காவலர் குழுவா என கேட்டு, அவரையும் இந்த வழக்கில் சேர்க்கலாமா என்று கேள்வி எழுப்பினார். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, 5 நபர்கள் மலை உச்சிக்கு சென்று பூஜை செய்ய அனுமதிப்பது குறித்து முடிவு தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Exit Poll Analysis Result | CM இவரு தான்? - அதிரடி முடிவுகளால் அதிர்ந்த தமிழகம்

Exit Poll Result | "வலிமையான எதிர்க்கட்சி உறுதி" - கருத்து கணிப்பு ஷாக் ரிப்போர்ட்

BREAKING || ஆட்சி பிடிக்கும் தவெக? - இந்தியாவையே திரும்பவைத்த ஒற்றை கணிப்பு

TVK | "தவெகவுக்கு 1 கோடி ஓட்டு... திமுக, அதிமுகவுக்கு பெரும் ஷாக் கொடுக்கும் விஜய்"

Exit Poll Result | சர்ப்ரைஸ் கொடுத்த கருத்து கணிப்பு.. இத யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க