சேலம் கோட்டை மாரியம்மன் பூச்சாட்டுதல் விழா
சேலம் மாவட்டம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பூச்சாட்டுதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் உற்சவ மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பெய்த மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் பக்தர்கள் நின்று வழிபாடு செய்தனர்.