தமிழ்நாடு

"நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல" - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு

பேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது. ஆனால் தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோத அடைத்து வைத்துள்ளதால் தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஏழு பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தை 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே நிராகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழு பேர் விடுதலை முடிவை மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்ததால், பேரறிவாளன் கருணை மனு மீது சுதந்திரமாகவும், சட்டப்படியும் ஆளுனர் முடிவெடுக்கலாம் என்றும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கு வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே