தமிழ்நாடு

Super Market | பொருட்களோடு நொறுக்கப்பட்ட சூப்பர் மார்கெட் - அதிகாரிகள் மீது கொதிப்பில் வியாபாரிகள்

பொருட்களோடு நொறுக்கப்பட்ட சூப்பர் மார்கெட் - அதிகாரிகள் மீது கொதிப்பில் வியாபாரிகள்

thanthitv

#supermarket #gummidipoondiissue

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது நிரந்தர கடை உரிமையாளர்களுக்கு சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 30-ஆம் தேதி, போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினர் நான்கு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் நிரந்தர கடை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கும்மிடிப்பூண்டியில் இன்று வியாபாரிகள் அரைநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

Maduranthakam | By Election | தீவிரமாக நடக்கும் தேர்தல் வேலைகள்.. முழு கட்டுப்பாட்டில் மதுராந்தகம்

Chennai | Bike Race | நள்ளிரவில் அச்சுறுத்தும் பைக் ரேஸ்.. 5 இளைஞர்களை தூக்கிய போலீசார்

Death | Bike Race | மேம்பாலத்தில் இருந்து பைக்கோடு கீழே விழுந்து இளைஞர் பலி..

Bike Race | TN Police | சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது - போலீசார் அதிரடி

Chennai | Traffic | சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த முக்கிய சாலை