அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருள்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் சென்னை புரசைவாக்கம் வளாகத்தில் சூப்பர் ஜுவல்லரி புதிய நகைக்கடையை அதன் நிறுவனர் ராஜரத்னம் திறந்து வைத்தார்... சூப்பர் ஜுவல்லரியின் 6வது கிளை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் வளாகத்தில் திறக்கப்பட்ட நிலையில், திறப்பு விழா சலுகையாக வரும் ஞாயிறு வரை பவுனுக்கு 2 ஆயிரம் ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது.. மேலும் வைர நகைகள் காரட்டுக்கு 25 ஆயிரம் குறைவாகவும், தாலிச்செயின் மற்றும் தங்க நாணயங்கள் சேதாரமின்றி சந்தை விலைக்கும் விற்கப்படுகிறது... திறப்பு விழாவில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழும நிர்வாக இயக்குநர் சபாபதி, ரேவதி ராஜரத்னம், சுனிதா சபாபதி, இயக்குநர்கள் ரோஷன் ஸ்ரீரத்னம், யோகேஷ் ஸ்ரீரத்னம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.