தமிழ்நாடு

Summer Leave | கோடை விடுமுறை - பெற்றோருக்கு பள்ளிக்கல்வி துறை முக்கிய செய்தி

கோடை விடுமுறை - பெற்றோருக்கு பள்ளிக்கல்வி துறை முக்கிய செய்தி

thanthitv

#summerleave #schoolldeave கோடை விடுமுறையையொட்டி பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுரை கோடை விடுமுறை காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளுக்கு மாணவர்களை அனுமதிக்க கூடாது என்றும், பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் குழந்தைகள் நேரத்தை பயனுள்ளதாக கழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மாணவர்கள் விளையாட்டு செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்து சென்று, அவர்களுக்கு விருப்பமான துறைகளில் உள்ள புத்தகங்களை வாசிக்க ஊக்குவிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்