தமிழ்நாடு

திருடனை அடையாளம் காட்டுபவர்களுக்கு சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் பரிசு

செயின் பறிப்பு திருடனை அடையாளம் காட்டுபவர்களுக்கும், பிடிக்கும் காவல்துறையினருக்கும் பரிசு வழங்கப்படும் என சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் கூறியுள்ளார்

தந்தி டிவி
சூலூர் தொகுதியில் மர்ம நபர்களால், தீ வைக்கப்பட்ட அரசு தொடக்கப் பள்ளியில் அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக்கு தீ வைத்த நபர்களை கண்டுபிடித்து கொடுக்கும் நபருக்கு 5 ஆயிரம் ரூபாயும், செயின் பறிப்பு திருடர்களை அடையாளம் காட்டுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், திருடனை கண்டுபிடித்து, நகை, பணத்தை பறிமுதல் செய்யும் காவலர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், தீ விபத்தில் இருந்து சேதம் அடைந்த பள்ளியை சீரமைக்க 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்வதாக அவர் உறுதி அளித்தார்.

Breaking | Manipur | Yumnam Khemchand Singh | மணிப்பூரில் புதிய முதல்வர் பதவியேற்பு

BREAKING || நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்... முதல் பேச்சை கேட்டு மிரண்டு பார்த்த எம்.பி.க்கள்

BREAKING || "ரத்து" உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | AmitShah | Karaikal | பிப்.14.. அமித்ஷா வருகை.. ரெடியாகும் காரைக்கால்

Breaking | President | Manipur | குடியரசு தலைவர் ஆட்சி அகற்றம்..! மணிப்பூரில் நிம்மதி பெருமூச்சு