எப்படியாவது நலமுடன் வந்துவிடுவான் என்று அனைவரும் எதிர்பார்த்த சுஜித் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது மனதை உலுக்குவதாக, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தன் உயிரைக் கொடுத்து சுஜித் கற்றுத் தந்துள்ள பாடத்தை அனைத்து தரப்பினரும் இனியாவது கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.