தமிழ்நாடு

திடீரென பழுதான என்ஜின்.. நடுக்கடலில் கதறிய மீனவர்கள் - தேடிப்போன காவல் படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

மாமல்லபுரம் அருகே படகு என்ஜின் பழுதானதால் கடலில் சிக்கி தவித்த 6 மீனவர்களை, 30 மணி நேரத்திற்கு பின் சக மீனவர்களே மீட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். ஆழ்கடலில் அவர்கள் மீன்பிடித்த நிலையில், அவர்கள் சென்ற படகின் என்ஜின் பழுதாகியுள்ளது. இதனால் 6 பேரும் கடலிலேயே உணவு எதுவுமின்றி தவித்துள்ளனர். இதனிடையே கடலுக்கு சென்றவர்கள் திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், போலீசாரை நாடியுள்ளனர். அதனைத்தொடர்ந்து கடலோர காவல்படையினர் தேடியபோது மீனவர்கள் கிடைக்கவில்லை. இந்தநிலையில் புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், சதுரங்கப்பட்டினம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், ஆழ்கடல் பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுட்டு, படகில் மயங்கிய நிலையில் இருந்த 6 பேரையும் 30 மணி நேரத்துக்கு பின் மீட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்