தமிழ்நாடு

Public Exam | New Rules | +2 தேர்வு நடக்கும் போதே திடீர் உத்தரவு - ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு

+2 தேர்வு நடக்கும் போதே திடீர் உத்தரவு - ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு

thanthitv

Public Exam | New Rules | பிளஸ் 2 தேர்வு நடக்கும் போதே திடீர் உத்தரவு - ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு #publicexam #12thexams #teacher #thanthitv தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு தமிழகத்தில் நடைபெற்று வரும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் பதினொன்றாம் வகுப்பு அரியர் தேர்வுகளில் சுமார் 45 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தேர்வுத் துறை இயக்குநர் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்வு மையத்திற்கு வரும் ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போன்களை முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையத்திற்கு வந்தது முதல் வெளியேறும் வரை, தங்கள் மொபைல் போனிலிருந்து கேள்வித்தாள் தொடர்பான எந்த தகவலும் அனுப்பவில்லை என உறுதிமொழி படிவத்தில் தினமும் கையெழுத்திட்டு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுத் துறையின் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களை நம்பாமல் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்