தமிழ்நாடு

Katcha Theevu | கச்சத்தீவு அருகே திடீர் பரபரப்பு

கச்சத்தீவு அருகே திடீர் பரபரப்பு

thanthitv

#katchatheevu #tnfishermen காரைக்கால் மீனவர்களை சிறைப்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் - சலசலப்பு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 10 பேரை ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைப்பிடித்து இருப்பதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தாங்கள் மீன்பிடிக்கும் பகுதிகளில் காரைக்கால் பகுதி மீனவர்கள் 15 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிப்பதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் காரைக்கால் மீனவர்களை சிறைப்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 2 விசைப்படகுகளையும் கைப்பற்றி மீன்வளத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் சூழலில் தமிழக கடலோரப் பகுதிகளில் காரைக்கால் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்