Vetri Payanam | TN Buses | TN Govt | "இனி பேருந்துகளில் ஆண்களுக்கும்.." வெளியான குட் நியூஸ் #VetriPayanam #TNBuses #TNGovt பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் வெற்றிப்பயணம் பேருந்துகளில், ஆண்களுக்கும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் 50 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 38 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லை-தூத்துக்குடி இடையே இயங்கும் இடைநில்லா பேருந்துகளில் 50 ரூபாயாகவும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் 47 ரூபாயாகவும், சாதாரண பேருந்துகளில் 35 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் 10 ரூபாயாக இருந்த கட்டணம் 7 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. திருச்சி கோட்டத்தில் 43 எக்ஸ்பிரஸ் பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில், திருச்சி-துறையூர் வழித்தடத்தில் ஆண்களுக்கு 10 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை 70-ல் இருந்து 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.