தமிழ்நாடு

ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு : அரசு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று நீதிபதி உத்தரவு

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தந்தி டிவி

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு, நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், பேனர் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் வரும் 23 ஆம் தேதி விசாரணைக்கு வருவதாகவும், அதுவரை விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்