தமிழ்நாடு

சுபஸ்ரீ மரணத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு - விசாரணையில் உள்ள வழக்குடன் சேர்த்து பட்டியலிட உத்தரவு

சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க கோரிய வழக்கை, நீதிபதி சத்தியநாரயணன் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கடந்த மாதம் 12 ம் தேதி பேனர் விழுந்த விபத்தில் இறந்த சுபஸ்ரீயின் தந்தை ரவி, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விபத்துக்கு காற்று தான் காரணம், காற்று மீது தான் வழக்கு பதிய வேண்டும் என ஒருவர் கூறியிருக்கிறார். அப்படி பார்த்தால் இனிமேல் சான்று பொருட்களை தான் சிறையில் அடைக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். பின்னர், சுபஸ்ரீ உயிரிழப்பு தொடர்பான வழக்கு வேறு அமர்வில் விசாரணையில் இருக்கும் நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை நீதிபதி சத்தியநாரயணன் அமர்வில் பட்டியலிட நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு