பள்ளியில் போட்டி போட்டு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகள் - வீட்டுக்கு சென்றதும் நேர்ந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அரசு நடுநிலைப்பள்ளியில், போட்டி போட்டுக்கொண்டு, இரும்பு சத்து மாத்திரையை சாப்பிட்ட 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்... வகுப்பறையில் ஆசிரியை இல்லாத சமயத்தில், மாத்திரைகளை சாப்பிட்ட நிலையில், வீட்டுக்குச் சென்றபின் மாணவிகள் வாந்தி எடுத்துள்ளனர்... மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்... பாதுகாப்பற்ற முறையில் மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்ததே காரணம் எனக் கூறி பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....